Kinemaster Template: கெய்ன்மாஸ்டர் என்று சொல்லக்கூடிய இந்த செயலியை கெய்ன்மாஸ்டர் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியை இன்நிறுவனம் 2013ம் ஆண்டு கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டது. இந்த செயலி வீடியோக்களை எடிட் செய்வதற்காக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
How to Use Kinemaster Template
Kinemaster Template இரண்டு வகைப்படும். ஒன்று Black screen video effect இரண்டாவது green screen video effect ஆகும். இந்த இரண்டு டெம்ப்ளேடையும் வைத்து நம்மால் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ உருவாக்க முடியும். இந்த இரண்டு Kinemaster Template எப்படி பயன்படுத்துவது என்பதை கீழே காணலாம்.
[wp_ad_camp_1]
வீடியோவை எடிட் செய்வதற்கான வடிவங்கள்?
கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய விரும்பும் போது நீங்கள் எந்த வடிவத்தில் வீடியோக்களை எடிட் செய்ய வேண்டும் என்பது நீங்களே முடிவு செய்யலாம்.
இந்த செயலியில் மூன்று வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்து கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வடிவில் வீடியோக்களை உருவாக்க நினைத்தாள் 1:1 என்ற வடிவத்தை தேர்வு செய்து உங்களது வீடியோக்களை எடிட் செய்து கொள்ளலாம்.
[wp_ad_camp_1]
உங்களது வீடியோவை கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனில் எப்படி கொண்டு வருவது?
கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனை நீங்கள் ஓபன் செய்த பிறகு நீங்கள் எந்த வடிவில் வீடியோக்களை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வடிவத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் மீடியா பிரவுசர் என்ற ஒரு முகப்பு திரைக்கு நீங்கள் செல்வீர்கள். அங்கு உங்களது மொபைலில் வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதில் இருக்கும். நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
[wp_ad_camp_1]
வீடியோ மற்றும் புகைப்படங்களில் தேவையற்ற இடங்களை எப்படி நீக்குவது?
வீடியோ மற்றும் புகைப்படங்களை நீங்கள் எடிட் செய்வதற்கான மீடியா லேயரில் கொண்டு வந்த பிறகு தேவையற்ற இடத்தை முதலில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை நமக்குத் தேவை இல்லை என்பதை முடிவு செய்த பிறகு மேலே முதலாவதாக ஒரு கத்தரிக்கோல் ஆப்ஷன் இருக்கும்.
அதை தேர்வு செய்ய வேண்டும். அங்கு தேவையற்ற இடத்தை நீக்குவதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை பயன்படுத்திக் தேவையற்ற இடத்தை நீக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் உருவாக்கிய வீடியோவை எப்படி பதிவிறக்கம் செய்வது?
கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய உங்களது வீடியோவை உங்களது மொபைல் சேமிக்க மேலே ஷேர் செய்வதற்கான ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.அதன் பிறகு கீழே உங்களுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான ஆப்ஷன் காட்டப்படும்.
உங்களுக்குத் தேவையான வீடியோ குவாலிட்டியை தேர்வு செய்தபிறகு கீழே எக்ஸ்போர்ட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு சிறிது நேரம் நீங்கள் காத்திருக்க வேண்டும். பின்னர் உங்களது மொபைலில் வீடியோ பதிவிறக்கம் ஆகிவிடும்.
Kinemaster Blending Option
ப்ளெண்டிங் ஆப்ஷன் உங்களது புகைப்படத்தை ஒரு வீடியோவுடன் இணைக்க அல்லது ஒரு வீடியோவை இன்னொரு வீடியோவுடன் நினைக்க பயன்படுகிறது. ப்ளெண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது புகைப்படத்தை வீடியோவுடன் இணைக்கும் பொழுது வீடியோவில் தெரியும் காட்சிகள் உங்களது புகைப்படத்தில் தெரியும். இந்த ப்ளெண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோக்களை அழகாக எடிட் செய்துகொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.
அதிகமாக ஓவர்லே மற்றும் ஸ்கிரீன் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் ஸ்க்ரீன் ஆப்ஷன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அல்லது வீடியோ மற்றும் வீடியோவை அல்லது புகைப்படம் மற்றும் புகைப்படத்தை ஒன்றுடன் ஒன்றாக இணைக்க பயன்படுகிறது.
Blending Opacity
இந்த ஆப்ஷன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்கும் பொழுது அதில் தெரியும் காட்சிகளின் பார்க்கும் அளவை குறைக்க இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உங்களுக்கு புரியும்படி கூற வேண்டுமென்றால் தெளிவாகத் தெரியும் காட்சியை கூர்ந்து பார்த்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு அதன் பார்க்கும் தன்மையை குறைப்பதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.
கெய்ன்மாஸ்டர் ப்ளெண்டிங் ஆப்ஷனை எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்களது விருப்பமான புகைப்படத்தை முதன்மை மீடியா லேயரில் கொண்டுவந்து வைக்க வேண்டும். அதன் பிறகு உங்களது வீடியோவை லேயரில் உள்ள மீடியா ஆப்ஷனில் சென்று அந்த வீடியோவை தேர்வு செய்ய வேண்டும். வீடியோவை தேர்வு செய்த பிறகு அருகாமையில் பல ஆப்ஷன்கள் காட்டப்பட்டிருக்கும். அதில் ப்ளெண்டிங் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம். உதாரணமாக கூற வேண்டும் என்றால் உங்களது புகைப்படத்தையும் வீடியோவை ஒன்றாக இணைக்க வேண்டுமென்றால் ஸ்க்ரீன் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனில் குரோமா கீ என்றால் என்ன?
குரோமா கீ ஆப்ஷன் என்பது வீடியோவில் உள்ள தேவையற்ற பேக்ரவுண்டு நீக்குவதற்கான ஒரு ஆப்ஷன் ஆகும். இந்த குரோமா கீ ஆப்ஷனை பயன்படுத்துவதற்கு உங்களது வீடியோவின் பேக்ரவுண்ட் கலர் ஒரே கலராக இருக்க வேண்டும். அந்த கலர் பச்சை நிறம் மற்றும் ஊதா நிறத்தில் இருந்தால் மிகவும் துல்லியமாக பேக்ரவுண்ட் நீக்க முடியும். பேக்ரவுண்ட் கலர் பச்சை நிறமாக வைத்து விட்டு முன்புறமாக நின்று நீங்கள் பேசி இருக்கும் பொழுது உங்களது உடம்பு மற்றும் ஆடைகளில் பச்சை நிறம் இருக்கக்கூடாது.
Chroma Key ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி?
கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்தபிறகு முதன்மை மீடியா லேயரில் உங்களது விருப்பமான பேக்ரவுண்ட் வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் கொண்டுவர வேண்டும். இது எதற்காக செய்கிறோம் என்றால் நீங்கள் கிரீன் ஸ்கிரீன் வீடியோவை நீக்கும் போது பின்புறத்தில் எந்த ஒரு வீடியோ அல்லது புகைப்படம் இருக்காது. அப்பொழுது அந்த இடம் கருப்பு நிறத்தில் தோற்றமளிக்கும்.
அதற்காக இடத்தில் நீங்கள் சேர்த்த பேக்ரவுண்ட் வீடியோ மற்றும் புகைப்படம் அதில் தெரியும். அதன்பிறகு லேயரில் உள்ள மீடியா ஆப்ஷனில் சென்று உங்களது கிரீன் ஸ்கிரீன் வீடியோவை சேர்க்க வேண்டும்.
பின்னர் வலதுபுறம் சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் குரோமா கீ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்த பிறகு அதில் enable என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோவில் உள்ள பச்சைநிறம் நீங்கி தேவையான வீடியோ மட்டுமே இருக்கும்.
சரியாக உங்களுக்கு அந்தப் பச்சை நிறம் நீங்கவில்லை என்றால் அதில் கலர் தேர்வு செய்வதற்கான ஆப்ஷனும் இருக்கும் அதை சரி செய்ய வேண்டும். பின்னர் மேலே இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை அட்ஜஸ்ட் செய்யும் பொழுது சரியாக பச்சை நிறம் நீங்கிவிடும்.
Kinemaster Blending Option Alternative
முதன்மை மீடியா லேயரில் உங்களது புகைப்படத்தை வைத்தபிறகு லேயரில் உள்ள மீடியாவில் உங்களது வீடியோவை கொண்டுவந்த பிறகு ப்ளெண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி இரண்டையும் ஒன்றாக இணைப்போம்.
அதற்குப் பதிலாக வீடியோவை தேர்வு செய்த பிறகு அருகாமையில் சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Alpha (Opacity) என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். அதில் 100% காட்ட வேண்டும் என்று இருக்கும்.
அதில் உங்களுக்குத் தேவையான அளவுக்கு குறைக்க வேண்டும். குறைக்கும் பொழுது வீடியோவில் உள்ள காட்சிகள் உங்களது புகைப்படத்திலும் தெரியும்.
Adjustment
வீடியோவின் பார்க்கும் திறனை குறைத்த பிறகு புகைப்படமும் வீடியோவும் ஒன்றாக தெரியும். ஆனால் வீடியோவின் தரம் ரொம்ப குறைவாக இருக்கும். அதை அதிகரிக்க அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு ஆப்ஷனை பயன்படுத்துகிறோம். இதில் பிரைட்னஸ், கான்ட்ராஸ்ட், லெவல் என்று மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த மூன்று ஆப்ஷனையும் தேவையான அளவிற்கு உங்களது வீடியோவில் அதிகரிக்கும் பொழுது வீடியோவை பார்ப்பதற்கு தெளிவாகவும் வீடியோவில் உள்ளது உங்களது புகைப்படத்திலும் தெளிவாக தெரியும். ப்ளெண்டிங் ஆப்ஷன் உங்களுக்கு பயன்படவில்லை என்றால் இந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தி வீடியோக்களை எடிட் செய்யலாம்.
Kinemaster Video Layer Problem
முதலில் உங்கள் கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்த பிறகு முகப்பு திரையில் கீழே செட்டிங்ஸ் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மூன்றாவதாக Device Capability Information என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் மொபைலுக்கு என்னென்ன பார்மட் சப்போர்ட் ஆகும் என்பதை இங்கு நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.
அதுமட்டுமின்றி உங்கள் கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷன் மூலம் எடிட் செய்யும் வீடியோவை எந்த குவாலிட்டியில் நீங்கள் எக்ஸ்போர்ட் செய்ய முடியும் என்பதை கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அதிகமான வீடியோ லேயர் எவ்வளவு சேர்க்க முடியும் என்பதையும் கொடுத்திருப்பார்கள். நாம் இப்போது லேயரில் உள்ள இமேஜில் எப்படி மீடியா என்று மாற்றுவது என்று பார்க்கலாம். Device Capability Information என்பதை கிளிக் செய்த பிறகு மேலே மூன்று புள்ளி கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
அதை கிளிக் செய்தவுடன் அனாலிசிஸ் நவ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்த பின்னர் ரிமைன் மி லேட்டர் மற்றும் ரன் அனாலிசிஸ் நங் என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ரன் அனாலிசிஸ் நவ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் அதைத் தேர்வு செய்த பின்னர் உங்கள் மொபைலுக்கு என்னென்ன பார்மட் சப்போர்ட் ஆகும் என்பதை அது உங்களுக்கு காட்டும். அதுமட்டுமின்றி லேயரில் இமேஜ் என்று இருந்தால் வீடியோவாக மாற்ற முடியுமா என்பதையும் உங்களுக்கு காட்டும்.
நீங்கள் ரன் அனாலிசிஸ் நவ் என்பதை கிளிக் செய்த பிறகு இரண்டு முதல் மூன்று நிமிடம் காத்திருக்க வேண்டும். வேற எந்த அப்ளிகேஷனை திறக்கக்கூடாது. இதில் நீங்கள் காத்திருக்க வேண்டும். ரன் அனாலிசிஸ் நவ் முடிந்த பிறகு நீங்கள் போய் பார்க்கலாம் லேயரில் இமேஜ் என்று இருந்தால் மீடியாவாக மாறிவிடும்.
இந்த முறையை நீங்கள் கையாளும் பொழுது உங்கள் மொபைலில் இமேஜ் என்று இருந்தால் வீடியோவாக மாறிவிடும் என்று நான் சொல்லவில்லை. இந்த முறையை பயன்படுத்தி அதிகமான மொபைலுக்கு இமேஜ் இருந்த இடத்தில் மீடியாவாக மாறியுள்ளது. இதை நீங்களும் பயன்படுத்தி பார்க்கலாம். இந்த முறை உங்களுக்கு பயன்பட்டது என்று நீங்கள் கருதினால் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் மற்றும் இந்த கட்டுரை தொடர்பான கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_1]